சித்தராமையாவின் சகோதரர் காலமானார்


சித்தராமையாவின்   சகோதரர் காலமானார்
x

சித்தராமையாவின் சகோதரர் காலமானார்.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் சகோதரர் ராமகவுடா (வயது 67). இவர் மைசூரு மாவட்டம் சித்தராமனஹூண்டி கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராமகவுடா, ைமசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சித்தராமையா, பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு சென்றுள்ளார்.


Next Story