விதிமீறி வாகன பதிவெண் பலகை: பெங்களூருவில் 9 மாதங்களில் 3 லட்சம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு


விதிமீறி வாகன பதிவெண் பலகை:  பெங்களூருவில் 9 மாதங்களில்   3 லட்சம் வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விதிமீறி வாகன பதிவெண் பலகை பொருத்தியதாக பெங்களூருவில் 9 மாதங்களில் 3 லட்சம் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு: விதிமீறி வாகன பதிவெண் பலகை பொருத்தியதாக பெங்களூருவில் 9 மாதங்களில் 3 லட்சம் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விதிமீறி வாகன பதிவெண் பலகை

பெங்களூரு நகரில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஓடுகின்றன. சிக்னலில் நிற்காமல் செல்வது உள்பட பல்வேறு வழிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாகன பதிவெண் பலகையில் திருத்தம் செய்து ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அதாவது வாகன பதிவெண் பலகையில் சிலர் புகைப்படங்கள், ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர். அதாவது அரசு உத்தரவை மீறி வாகன பதிவெண் பலகைகளை பொருத்தியிருந்தனர். அத்தகைய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர்.

3 லட்சம் வழக்குகள்

இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) ரவிகாந்தேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்கள், புகைப்படங்களை ஓட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின், வாகன பதிவெண்ணை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன பதிவெண்ணை டயருக்கு பக்கத்தில் பொருத்தி உள்ளனர். இது போக்குவரத்து விதிகளை மீறுவது ஆகும்.

பெங்களூருவில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை விதிமீறி வாகன பதிவெண் பலகை பொருத்தி இருந்ததாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 487 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். சமீபத்தில் கூட வாகன பதிவெண் பலகையில் மத்திய அரசு ஊழியர் என்று ஸ்டிக்கர் ஓட்டி இருந்த மத்திய அரசு ஊழியர் மீதும் வழக்குப்பதிவு செய்தோம். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story