சமூக நலத்துறை மாணவர்கள் விடுதியில் அதிகாரி திடீர் ஆய்வு


சமூக நலத்துறை மாணவர்கள் விடுதியில் அதிகாரி திடீர் ஆய்வு
x

சமூக நலத்துறை மாணவர்கள் விடுதியில் அதிகாரி திடீரென்று ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் தங்கவயல்-

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா பாரண்டஹள்ளியில் சமூக நலத்துறைக்கு சொந்தமான விடுதி இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று சமூக நலத்துறை அதிகாரி கல்லேஷ் மற்றும் பங்காருபேட்டை தாசில்தார் தயானந்த் ஆகியோர் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், விடுதியில் எந்த வசதியும் இல்லை என்றும், உணவும் தரமானதாக கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அதிகாரிகள் விடுதிக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது விடுதியில் தரமற்ற அரிசி பயன்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காய்கறிகள் அழுகிய நிலையில் இருந்தன. இதனால், விடுதி வார்டன்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும், விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story