கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்


கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்
x

அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியின் உடலால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா அம்பிகாபுராவை சேர்ந்தவர் பழனியம்மா(வயது 65). நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடலை உறவினர்கள் தகனம் செய்வதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த இடத்திற்கு எடுத்து சென்றனர். அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் பராமரிக்கப்படாமல் உள்ள கால்வாயை தாண்டிதான் செல்லவேண்டும். தற்போது கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பழனியம்மாவின் உடலுடன் உறவினர்கள் அந்த கால்வாயை கடக்க முயற்சித்தனர்.

அப்போது வெள்ளத்தில் பழனியம்மாவின் உடல் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி, வேறு இடத்தில் தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் மாவட்ட மற்றும் தாலுகா அதிகாரிகளிடம் மயானம் அமைத்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஏற்ற மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


Next Story