குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


குடும்ப பிரச்சினையில்   தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு: பெங்களூரு நாகரபாவியில் வசிப்பவர் இந்திரகுமார், கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி பூர்த்தி (வயது 31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று பூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினையால் மனைவியின் செல்போனை இந்திரகுமார் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story