ஆந்திர வாலிபர் மீது பெண் பாலியல் புகார்


ஆந்திர வாலிபர் மீது   பெண் பாலியல் புகார்
x

ஆந்திர வாலிபர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு பண்டேபாளையா போலீசில் 26 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில், நான் கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். அப்போது அங்கு வேலை செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த முசாமில் (வயது 28) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் முசாமில், என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார்.

தற்போது என்னை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் நான் கொடுத்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த முசாமில், என்னை சந்தித்து மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரை ஏற்ற போலீசார் முசமிலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story