ஜூலை 2ல் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல் மந்திரிகள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது .
2024 பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.இதனால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த்ததாக கருதப்படுகிறது .
Related Tags :
Next Story