அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி கிராம மக்கள் போராட்டம்
கொப்பா அருகே அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடன் ராஜேகவுடா எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரந்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதியில் இலவசமாக அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், வீடு கட்டுவதற்கு அரசு கடன் உதவி வழங்க வேண்டும் என கூறியும் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்களிடம் ராஜேகவுடா எம்.எல்.ஏ. பேசுகையில், இங்கு வீடு கட்டுவதற்கு 316 பேர் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த பகுதியில் 210 பேர் மட்டும் வீடு கட்டுவதற்கு இடம் உள்ளது. இதில் யாருக்கு அனுமதி கொடுப்பது என்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். அதேநேரத்தில் மற்றவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்கப்படும் என்றார்.