சிக்கமகளூருவில் ஆயுதபூஜையையொட்டி பூக்களின் வரத்து குறைந்ததால் விலை கிடுகிடு உயர்வு
சிக்கமகளூருவில் ஆயுதபூஜையையொட்டி பூக்களின் வரத்து குறைந்ததால் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
சிக்கமகளூரு;
கர்நாடக தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆயுதபூஜை விமரிசையாக கொண்டாட படுகிறது. இதையடுத்து நேற்று சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள அனுமந்தப்பா சர்க்கிள், சந்தை மைதானம், எம்.ஜி.ரோடு மற்றும் மூடிகெரே, தரிகெரே, கொப்பா, சிருங்கேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜைக்காக பூக்கள் பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது.
மேலும் மா, வாழை, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையில் பூக்கள் அனைத்தும் நாசமானது.
இதனால் மாா்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்தது. பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொருட்கள் வாங்கவரும் மக்கள் பூக்களின் விலை கேட்டு அதிா்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் அதிக அளவில் பூக்கள் வாங்காமல் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.