மைசூருவில் தசரா விழாவையொட்டி அனைத்து வார்டுகளிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும்


மைசூருவில் தசரா விழாவையொட்டி  அனைத்து வார்டுகளிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் அனைத்து வார்டுகளிலும் தசரா விழாவுக்காக மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும் என்று மேயர் சிவக்குமார் கூறினார்.

மைசூரு:

கவுன்சில் கூட்டம்

மைசூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் புதிய மேயர் சிவக்குமார், துணை மேயர் ரூபா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்கள். பின்னர் மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி முன்னிலையில் கவுன்சில் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து தசரா விழா தொடர்பாக மைசூரு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

சாலை சீரமைப்பு

சாலைகள் சீரமைப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து மேயர் சிவக்குமார், வீடு-வீடாக சென்று நான் ஆய்வு நடத்தி இருக்கிறேன். மழையால் சாலைகள் சேதம் அடைந்தது உண்மைதான். தசரா விழா தொடங்குவதற்குள் சாலை சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றார்.

பின்னர் நகரின் தூய்மை குறித்து கவுன்சிலர்கள் பேசினார்கள். அப்போது பேசிய மேயர் சிவக்குமார் தசரா விழா சமயத்தில் தூய்மை பணி துரிதப்படுத்தப்படும் என்றும், விழா நடைபெறும் நாட்களில் முழுநேரமும் தூய்மை பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

மின்விளக்கு அலங்காரம்

மேலும் மைசூரு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது, மின்விளக்கு அலங்காரங்கள் செய்வது போன்ற பணிகள் அனைத்தும் விரைவில் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சேர்த்து 123 கிலோ மீட்டர் தூரத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story