சர்வதேச காபி தினத்தையொட்டி குடகில் காபி திருவிழா; கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்தார்
சர்வதேச காபி தினத்தையொட்டி குடகில் காபி திருவிழாவை கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
குடகு;
சர்வதேச காபி தினத்தையொட்டி நேற்று குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ராஜாசீட் பகுதியில் காபி திருவிழா நடந்தது. காபி வாரியம் சார்பில் நடந்த இந்த திருவிழாவை மாவட்ட கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், குடகில் வருகிற டிசம்பர் மாதம் பல்வேறு வாரியங்கள் மற்றும் சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஒரு வாரம் காபி, தேன், ஒயின் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரேசில், வியட்நாம் பகுதிகளில் சமவெளியில் காபி பயிரிடப்படுகிறது.
ஆனால் மலைகள் சூழ்ந்த குடகு உள்ளிட்ட மலைநாடுகளில் விளைவிக்கப்படும் காபிக்கு தனி சிறப்பு உண்டு என்றார். இந்த திருவிழாவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு காபியை ருசித்து பருகினர். மேலும் ஏராளமானோர் காபியை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story