சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஹாசனாம்பா கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை


சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஹாசனாம்பா கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
x

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஹாசனாம்பா கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாசன்: ஹாசன் மாவட்டத்தில் உள்ளது ஹாசனாம்பாதேவி கோவில். ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று மட்டும்தான் இந்த கோவில் திறக்கப்படும். இந்த கோவில் நடை திறக்கப்படும்போது கடந்த ஆண்டு பூஜை செய்து வைத்திருந்த பிரசாதம் கெட்டுபோகாமலும், தீபம் அணையாமலும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 13-ந் தேதி கோவில் திறக்கப்பட்டது. 15-ந் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 12-வது நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மந்திரி ஸ்ரீராமலு, சாம்ராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ. நாகேந்திரா, ஹாசன் தொகுதி எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா, இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் ஆகியோர் அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கிடையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (26-ந் தேதி) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story