தாஜ்மஹாலுக்குள் நுழைய இன்று ஒருநாள் அனுமதி இலவசம்
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா,
உலகப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலுக்கு இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் தனி இடம் உண்டு. இது இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுளாதளமாகவும் இருந்து வருகிறது
கொரோனா காலகட்டத்திலும் கூட தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் தாஜ்மஹாலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஒருநாள் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story