வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் மோசடி


வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா சென்னஹத்து கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவர் விளம்பரம் ஒன்றில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதற்கு ஆள்தேவைப்படுவதாக கூறி உள்ளார். மேலும், அதற்கு முதலில் ரூ.90 ஆயிரம் மற்றும் ஆதார் உள்ளிட்ட தகவல்களையும் கேட்டுள்ளார். அதை உண்மை என நம்பிய வாலிபர், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.90 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதையடுத்து செல்போன் இணைப்பை மர்மநபர் துண்டித்து கொண்டார். இந்த நிலையில் பலநாட்கள் ஆகியும் அவருக்கு வேலை குறித்து எந்த தகவலும் வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து மர்மநபரை அவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்மநபர் வேலை தருவதாக கூறி பணமோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story