ராகுல்காந்தி நடைபயணத்தில் இன்று பெண்கள் மட்டும் பங்கேற்பு


ராகுல்காந்தி நடைபயணத்தில் இன்று பெண்கள் மட்டும் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 5:33 AM GMT (Updated: 19 Nov 2022 5:39 AM GMT)

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி இன்று பெண்கள் மட்டுமே ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்கின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த 7-ந் தேதி முதல் மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நாந்தெட், ஹிங்கோலி, வாசிம் மாவட்டங்களை கடந்து உள்ளார். தற்போது அகோலாவில் உள்ள அவர் தொடர்ந்து புல்தானா மாவட்டத்துக்கு செல்கிறார்.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) புல்தானாவில் நடைபெறும் ராகுல் காந்தி நடைபயணத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், " வருகிற 19-ந் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்பார்கள். காங்கிரஸ் பெண் தொண்டர்கள், மகளிர் அணிகளை சேர்ந்தவர்கள் காலை, மதியம் நடைபயணத்தில் கலந்து கொள்வார்கள். மராட்டிய மாநிலம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பெண் மக்கள் பிரதிநிதிகளும் நடைபயணத்தில் பங்கேற்பார்கள் " என்றார்.


Next Story