அதானி கடன் விவகாரம்: விவரங்களை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன் அதிரடி
அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி பங்குகள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், ஜேபிசி விசாரணை கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story