மாட்டிறைச்சி கூடம் நடத்தியவர்களின் நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவு
மங்களூருவில், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம் நடத்தியவர்களின் நிலத்தை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு;
கர்நாடகத்தில் பசுவதைதடை சட்டம் அமலில் உள்ளது. இதனால் மாடுகளை இறைச்சிக்காக கடத்துபவர்கள், விற்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி இறைச்சிக்காக மாடுகள் கடத்தியதாக 7 பேரை கங்கநாடி போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அடூர் ஆடியப்பாடியை சேர்ந்த யாகூப் மற்றும் கடிபல்லாவை சேர்ந்த ஹக்கீம், அர்க்குலாவை சேர்ந்த பதிஷ், கஞ்சிமாத்தை சேர்ந்த யூசுப் ஆகியோர் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம் நடத்தியது தெரியவந்தது.
இந்த நிலையில் பசுவதை தடுப்பு நடவடிக்கையாக தட்சிண கன்னடா மாவட்ட உதவி கலெக்டர் மதன்மோகன், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம் நடத்தியவர்களின் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Next Story