அதானி குழுமம் இந்த ஆண்டு சந்தை முதலீட்டில் 20 ஆயிரம் கோடி டாலர்களை கடந்துள்ளது: கவுதம் அதானி பெருமிதம்!


அதானி குழுமம் இந்த ஆண்டு சந்தை முதலீட்டில் 20 ஆயிரம் கோடி டாலர்களை கடந்துள்ளது: கவுதம் அதானி பெருமிதம்!
x

அதானி குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானி, பங்குதாரர்கள் மத்தியில் பேசினார்.

புதுடெல்லி,

அதானி குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானி, பங்குதாரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

எங்கள் அதானி குழுமம், சந்தை முதலீட்டில் இந்த வருடம் 200 பில்லியன்(20 ஆயிரம் கோடி) அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது.

நாங்கள் தகவல் தரவு, டிஜிட்டல் ஆப், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு துறை, விண்வெளி, விமான, உலோகங்கள் என பல்வேறு துறைகளில் அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்'(சுயசார்பு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளோம்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமாக கணக்கிடப்பட்டுள்ள எட்டு சதவீதத்தை, இந்த ஆண்டு நிச்சயம் அடையும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இதில் அரசுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு அனைத்து துறைகளையும் சம அளவில் திறமையாக கையாண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றிலிருந்து போராடி வெளியே வந்துள்ளது. உலக அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பெரும் பொருளாதார நாடாக திகழ்கிறது.

நம்முடைய நாடு காலநிலை மாற்றம் பற்றி பேசி வரும் அதே வேளையில், பசுமை வழி ஆற்றலை முன்னெடுத்துச் செல்கின்ற வெகு சில நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. இந்தியாவின் பசுமை வழி ஆற்றல் துறையின் திறன் ௨௦௧௫ முதல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. பசுமை வழி ஆற்றல் துறை தொழில் முதலீட்டில், 2020-21 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கடந்த வருடம் 125 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story