நமது இளைஞர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்


நமது இளைஞர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்
x

நமது இளைஞர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:-

உயிர் வாழும் இனம்

பெங்களூருவில் தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி வரும் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விருது வழங்கி பாராட்டினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு 25-வது ஆண்டாக நடக்கிறது. இதையொட்டி வெள்ளி விழாவை நாம் கொண்டாடுகிறோம். தொழில்நுட்பத்துறை இந்த அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அதன் நிா்வாகிகள் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ஆர்வமுடன் இருக்கிறார்கள். நமது உலகில் மனித சமூகம் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் இனமாக உள்ளது.

கணிதத்தின் பங்கு

மனிதர்கள் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வாழ்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியில் தனி நபர்கள் ஈடுபடுகிறார்கள். தகவல், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கணிதத்தின் பங்கு முக்கியமானது. நமது வாழ்க்கையில் தொடர்புகள் என்பது மிக முக்கியமானது.

தகவல் தொழில்நுட்பத்திலும் அதே தொடர்புகள் முக்கியமாக உள்ளது. நமது இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காணும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். நமக்கு பசி வந்தால் மட்டுமே சாதிக்க முடியும். பசி உள்ளவரால் மட்டுமே ஏதாவது புதுமையாக செய்ய முடிகிறது. இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் தகவல்-உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story