கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் 'படையப்பா' யானை - வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா யானை - வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

பாம்பன் மலைப்பகுதியில் விவசாய பயிர்களை ‘படையப்பா’ யானை சேதப்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மாயூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக 'படையப்பா' என்ற யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை சில நாட்களுக்கு முன்பு பாம்பன் மலைப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் அதே பகுதியில் நள்ளிரவில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அங்கு மாடுகளுக்காக வாங்கி வைக்கப்பட்ட புற்களை சாப்பிட்ட பின்பு, விவசாய பயிர்களை 'படையப்பா' யானை சேதப்படுத்தியதாகவும், இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story