இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் குழந்தை நல்லெண்ண அடிப்படையில் பத்திரமாக ஒப்படைப்பு!
அந்த குழந்தை கவனக்குறைவாக எல்லையைத் தாண்டி இந்திய பக்கம் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
புதுடெல்லி,
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை 1 ஆம் தேதி(நேற்று), இரவு 7:15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று, பஞ்சாப் எல்லை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தையை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டனர்.
அந்த குழந்தை கவனக்குறைவாக எல்லையைத் தாண்டி இந்திய பக்கம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.அதன்பின்னர், விவரங்கள் சேகரிக்கப்பட்டு, 9:45 மணிக்கு பாகிஸ்தான் வீரர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.எல்லை பாதுகாப்பு படையின் 182 பேட்டாலியன் பெரோஸ்பூர் பிராந்திய துருப்புக்கள், பாகிஸ்தான் குழந்தையை ஒரு நல்லெண்ணச் செயலாக பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story