இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை
x

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய் நுழைய முயன்றவரை எல்லை பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது.

ஜம்மு,

காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டம் அரினா செக்டர் பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார். காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வந்ததால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார். இதேபோல சம்பா மாவட்டம் ராம்கர் செக்டார் அருகே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர். எல்லையில் பாகிஸ்தானியர் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.


Next Story