நாடாளுமன்றம், அகந்தையால் கட்டப்பட்டது அல்ல- ராகுல் காந்தி கருத்து


நாடாளுமன்றம், அகந்தையால் கட்டப்பட்டது அல்ல- ராகுல் காந்தி கருத்து
x

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பது பெருத்த சர்ச்சையாகி இருக்கிறது

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பது பெருத்த சர்ச்சையாகி இருக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பு ஆகும். நாடாளுமன்றம் அகந்தையால் ('ஈகோ') கட்டப்பட்டது அல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டது ஆகும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story