பகுதி நேர வேலைவாய்ப்பு: பல கோடி ரூபாய் மோசடி செய்த சீன கும்பல்
சீனாவில் இருந்தவாறு பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி, சீன கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
புதுடெல்லி,
சமீபத்தில் செல்போன் செயலி மூலம் சிறிய தொகையை உடனடி கடனாக கொடுத்து பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு என விளம்பரம் செய்ததில் பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கீப்ஷேரர் செயலி உருவாக்கி கும்பல் ஒன்று பணம் பறித்துள்ளது.
கீப்ஷேரர் செயலி மூலம் பெங்களூருவில் 12 இடங்களில் நிறுவனம் தொடங்கிய கும்பல் திடீரென பிளேஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டதால், பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளம்பரத்தை கண்டு ஏமாந்தவர்கள் அமலாக்கத்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது சீன கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி விசாரணை நடத்தி வருகின்றனர்.