மத்திய அரசின் தடை மீறிய மனித உரிமைகள் அமைப்புக்கு அபராதம்..!


மத்திய அரசின் தடை மீறிய மனித உரிமைகள் அமைப்புக்கு அபராதம்..!
x

அம்னெஸ்டி இந்தியா அமைப்பு மீது அமலாக்கத்துறை விதித்த 52 கோடி ரூபாய் அபராதத்தொகை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

புதுடெல்லி,

அம்னெஸ்டி இந்தியா அமைப்பு மீது அமலாக்கத்துறை விதித்த 52 கோடி ரூபாய் அபராதத்தொகை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற புகழ்பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்தியாவில் 1966 முதல் இயங்கி வருகிறது.

பல்வேறு மனித உரிமை மீறல்கள், காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக அதன் இந்தியக்கிளை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தேச விரோத நடவடிக்கைகளில் அம்னெஸ்டி இந்தியா ஈடுபடுவதாகக் கூறி வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு மத்திய அரசு 2013-ம் ஆண்டு தடை விதித்தது.

இந்த தடையை மீறி 52 கோடி ரூபாய் பணத்தை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முதலீடுகள், வணிக பயன்பாடு என்ற பெயரில் அதன் இந்தியக்கிளைக்கு அனுப்பியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அம்னெஸ்டி இந்தியா மீது 52 கோடி ரூபாய் அபராதமும் அதன் முன்னாள் தலைவரான ஆகர் பட்டேல் மீது 10 கோடி ரூபாய் அபராதமும் அமலாக்கத்துறை விதித்தது. அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இவற்றை நேற்று உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது.


Next Story