அசுரன் உருவப்பொம்மையை எரித்து விஜயதசமி கொண்டாடிய மக்கள்


அசுரன் உருவப்பொம்மையை எரித்து விஜயதசமி கொண்டாடிய மக்கள்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:30 AM IST (Updated: 7 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் அசுரன் உருவப்பொம்மையை எரித்து விஜயதசமியை மக்கள் கொண்டாடினர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூருவில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நவராத்திரி நிறைவு விழா மற்றும் விஜயதசமியையொட்டி நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் விஜயாபுரா, அரவிந்த் நகர், தமிழ் காலனி ஆகிய பகுதிகளில் அசுரன் உருவப்பொம்மையை தீவைத்து எரிக்கும் நிகழ்வு நடந்தது.

அந்தப்பகுதி மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் அசுரன் உருவப்பொம்மையை தீவைத்து எரித்தனர். சிக்கமகளூரு அருகே ஆரதவள்ளி கிராமத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து துர்க்கை அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

மேலும் கோவில் அருகே உள்ள குளத்தின் கரையில் வாழை மரத்தை வைத்து ஊர் தலைவர் மகேஷ் என்பவர் குறி வைத்து அம்பு ஏய்தார். இதேபோல், ஒரநாடு அன்னப்பூர்ணேஸ்வரி அம்மன் கோவிலில் தேங்காயை வரிசையாக வைத்து அதனை துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி கொண்டாடப்பட்டது.


Next Story