"மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்" - அமித்ஷா பேச்சு
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார் .
புதுடெல்லி,
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் . பெரும்பான்மையுடன் 2 முறை மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். குடும்ப அரசியலை பிரதமர் அகற்றி உள்ளார். பிரதமர் மோடி தினமும் 17 மணி நேரம் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார். உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story