வீடுகள் புதைந்து பாதிக்கப்பட்ட ஜோசிமத் நகர மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோசிமத் நகரம், புதையும் நகரம் என பெயர் பெற்றது.
கோபேஸ்வர்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோசிமத் நகரம், புதையும் நகரம் என பெயர் பெற்றது. மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தில் பெரும்பாலான கட்டிடங்கள் நிலத்தில் சரிந்தும், பிளவுபட்டும், புதைந்தும் வருகின்றன. எனவே மக்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஜோசிமத் நகர மக்கள் பல நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாலை திரளான ஜோசிமத் நகர மக்கள், தெருக்களில், தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி, தங்களுக்கு இழப்பீடு தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story