விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் புட்டரெங்கஷெட்டி எம்.எல்.ஏ. பேச்சு


விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்  புட்டரெங்கஷெட்டி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவேண்டும் என்று புட்டரெங்கஷெட்டி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் டவுன் சி.எச்.படேல் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னட மற்றும் சமஸ்கிருத துறை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ பேசியதாவது:- விஸ்வகர்மா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இளைஞர்கள், மாணவர்களுக்கு விஸ்வகர்ம மிகவும் எடுத்துகாட்டாக விளங்கினார். குல கல்விமுறையை கொண்டு வந்த அவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது மட்டுமின்றி விஸ்வகர்ம சமுதாயத்தின் சார்பில் வழங்கப்படும் சலுகைகளையும் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அரசியலிலும், கல்வியிலும் சிறந்து விளங்கவேண்டும். வேலைவாய்ப்பு, கங்கா கல்யாண திட்டம், சுய உதவிகள் மூலம் கிடக்கும் கடன் தொகை போன்றவை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பொருளாதார ரீதியாக விஸ்வகர்மா சமுதாய மக்கள் முன்னேற வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், மக்களும் வளர்ச்சி பாதைக்கு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story