நம்பிக்கை துரோகிகளை மக்கள் மீண்டும் அரியணையில் அமர்த்தக்கூடாதுசி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு
நம்பிக்கை துரோகிகளை மக்கள் மீண்டும் அரியணையில் அமர்த்தக் கூடாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
சிக்கமகளூரு-
நம்பிக்கை துரோகிகளை மக்கள் மீண்டும் அரியணையில் அமர்த்தக்கூடாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
பா.ஜனதா பொதுக்கூட்டம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி பா.ஜனதா கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் தீபக் தொட்டய்யா. நேற்று முன்தினம் இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஊர்வலமாக வந்தார்.
இதில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் கலந்து கொண்டார். பின்னர் அந்தியோதயா மைதானத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சி.டி.ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
துரோகம் செய்துவிட்டார்
இந்த தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குமாரசாமி, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுப்பதாக தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்திருந்தார். ஆனால் அவர் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும் அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் எஸ்.டி.குமாரசாமிக்கே துரோகம் செய்துவிட்டார். இதுபோன்ற நம்பிக்கை துரோகிகளை மக்கள் மீண்டும் அரியணையில் அமர்த்தக்கூடாது. மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பா.ஜனதா வேட்பாளரை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு சி.டி.ரவி பேசினார்.