அரசின் சலுகைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் முதல்-மந்திரியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பேட்டி


அரசின் சலுகைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்  முதல்-மந்திரியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசின் சலுகைகள் மக்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று முதல்-மந்திரியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனேக்கல்:

பெங்களூருவில் வசித்து வரும் வடகர்நாடக மக்கள் ஆண்டுதோறும் வடகர்நாடக உற்சவத்தை கொண்டாடுவார்கள். இந்தாண்டுக்கான வடகர்நாடக உற்சவம் பெங்களூரு புறநகர் மாவட்டம் சர்ஜாப்புரா நகரில் நடந்தது. இந்த விழாவை முதல்-மந்திரியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சங்கர் பஜோஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலவேறு பகுதிகளில் வசித்து வரும் வட கர்நாடக மக்கள் ஒன்று கூடி வடகர்நாடக உற்சவ விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு சார்பில் வடகர்நாடக மக்களின் பயன்பாட்டிற்காக நெலமங்களாவில் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இதற்காக கடந்த 3 ஆண்டாக வடகர்நாடக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிலத்தை ஒதுக்கீடு செய்தார். அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். அதன்படி அரசின் சலுகைகளை மக்கள் பெற்று பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story