பொதுஇடங்களில் விளம்பர பலகை, ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறவேண்டும்


பொதுஇடங்களில் விளம்பர பலகை, ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறவேண்டும்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி மாவட்டத்தில் பொதுஇடங்களில் விளம்பர பலகை மற்றும் ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குர்மா ராவ் உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு:-

ஆலோசனை கூட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தேர்தல் ஒழுங்குமுறை நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுஇடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் விளம்பர பலகை, ஒலிபெருக்கிகள் வைக்கப்படுகிறதா என்பதையும் மாவட்ட நிர்வாகம் கவனித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மணிப்பாலில் மாவட்ட கலெக்டர் குர்மாராவ் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாக்காளர் பட்டியல்....

அப்போது கலெக்டர் குர்மா ராவ் கூறியதாவது:-

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பெயர் விடுப்பட்டிருந்தால் உடனே சேர்ந்து கொள்ளவேண்டும். மேலும் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டியிருந்தால், அதை சரி செய்து கொள்ளவேண்டும்.

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டிருந்தால் உடனே மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் தேர்தல் அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பில் குறைபாடு இருக்க கூடாது.

அனுமதி பெறவேண்டும்

இந்த முறை 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீடுகளில் இருந்தப்படியே தபால் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்கவேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது. மேலும் தேர்தல் நெருங்குவதால் பொதுஇடங்களில் தேவையில்லாமல் பெயர் பலகை, விளம்பர பலகை, பிரசார பலகை, ஒலிபெருக்கிகள், ஆலோசனை கூட்டம், பேரணிகள் நடத்த கூடாது. விளம்பர பலகை, ஒலிபெருக்கி வைக்க கலெக்டர் அல்லது தாலுகா, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.

அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகை, ஒலிபெருக்கிகள் அகற்றப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல அனுமதி வழங்கிய தேதிக்குள் விளம்பர பலகை, ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட கூடாது. இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story