ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு - விசாரணையை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு - விசாரணையை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது.

சென்னை,

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது.

ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இதனை விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு, விசாரணை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, எழுத்துப்பூர்வ வாதங்களை நவம்பர் 7ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Next Story