நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே சீருடையை அமல்படுத்தகோரி மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை அறிமுகம் செய்யக்கோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. இந்த மனுவில் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story