பி.எப்.ஐ. அமைப்பின் செயல்பாடுகளை இ்த்தனை நாட்கள் அனுமதித்தது ஏன்?-முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி
பி.எப்.ஐ. அமைப்பின் செயல்பாடுகளை இ்த்தனை நாட்கள் அனுமதித்தது ஏன்? என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே, பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்து இருப்பது குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது நல்ல முடிவு தான். நான் இதை வரவேற்கிறேன். ஆனால் இவ்வளவு காலதாமதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உளவுத்துறை அதிகாரிகளின் தோல்வியே காரணம். கர்நாடகம், குஜராத், அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த அமைப்பு செயல்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பயங்கரவாத செயல்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்த தகவல்கள் இவ்வளவு காலமாக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் கவனத்திற்கு வரவில்லையா?. இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த அமைப்பின் செயல்பாடுகளை அனுமதித்தது ஏன்?.
இவ்வாறு அவர் கூறினார்.