குழாய் மூலம் மதுபானம் வழங்கப்படுகிறதா ? - மத்திய அரசு விளக்கம்


குழாய் மூலம் மதுபானம் வழங்கப்படுகிறதா ? - மத்திய அரசு விளக்கம்
x

Image Courtesy : AFP (Representative Image)

தினத்தந்தி 18 July 2022 9:39 PM IST (Updated: 18 July 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் அலுவலகத்திற்கு ரூ.11,000 செலுத்தினால் குழாய் மூலம் மதுபானம் வழங்கப்படும் என செய்தி பரவியது.

புதுடெல்லி,

அரசாங்கம் குழாய் வழியாக மதுபானம் வழங்குகிறது என்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுபிரியர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு ரூ.11,000 செலுத்தினால் குழாய் மூலம் மதுபானம் வழங்கப்படும் என ஒரு அறிக்கையுடன் இணையத்தில் செய்தி பரவியது. இதற்கு டுவிட்டரில் விளக்கமளித்துள்ள மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகம் (செய்திப் பிரிவு ) அந்த அறிக்கையை மீம்-ஆக பகிர்ந்து " அமைதி நண்பர்களே, உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தாதீர்கள்" என பதிவிட்டுள்ளது.


Next Story