அதானி குழும பங்குகளை செயற்கையாக வீழ்ச்சியடைய செய்த ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடர வேண்டும்சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


அதானி குழும பங்குகளை செயற்கையாக வீழ்ச்சியடைய செய்த ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடர வேண்டும்சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
x

ஹிண்டன்பர்க் முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளை செயற்கையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நியூயார்க்கை சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளை செயற்கையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது. அப்பாவி முதலீட்டாளர்களை தனது சுயநலத்துக்கு பலியாக்கி உள்ளது. இந்திய பங்குச்சந்தையை வஞ்சித்துள்ளது.

அந்த நிறுவனம், பங்குகளை கடனுக்கு விற்று, அதை பின்னர் குறைந்த விலைக்கு வாங்கும் செயலில் ஈடுபட்டதை மோசடியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அதன் மீது மோசடி வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருப்பதாக வக்கீல் எம்.எல்.சர்மா கூறினார்.


Next Story