வரதட்சணை புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் 2-வது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட கணவர்


வரதட்சணை புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம்  2-வது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட கணவர்
x

வரதட்சணை புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் 2-வது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சித்தார்த் ஒசமணி. காப்பீடு நிறுவன ஊழியர். சித்தார்த்துக்கு திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்தார்த், விதவை பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையை தனது முதல் மனைவியின் சகோதரிக்கு குழந்தை இல்லாததால் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சித்தார்த் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தையை கடத்தியதாக 2-வது மனைவி மல்லேசுவரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சித்தார்த்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சித்தார்த், 2-வது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் சிறையில் இருந்த ரவுடியான பெட்டப்பா என்பவரின் உதவியுடன் கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித், யோகேஷ் ஆகியோருக்கு பணம் கொடுத்து 2-வது மனைவியை கடத்தி கொலை செய்ய சித்தார்த் திட்டமிட்டார். இதுபற்றி அறிந்ததும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரஞ்சித், யோகேஷ், சித்தார்த்தை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story