மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.50 ஆக உயர்வு..!
மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மும்பை,
தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்பவர்கள் ரெயில் மூலம் பயணம் செய்ய வழியனுப்ப வருபவர்களுடன் ரெயில் நிலையத்தில் கூடுகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன்படி மும்பை சி.எஸ்.எம்.டி., தாதர் குர்லா டெர்மினஸ், தானே, கல்யாண், பன்வெல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த தகவலை மத்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் தெரிவித்துள்ளார். வழக்கமாக பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story