தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்


தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
x

டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

புதுடெல்லி,

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். அ

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இது குறித்து பிரதமர் மோடி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடியாவது:

தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது என மதுரையை சேர்ந்து அஸ்வினி பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி,

முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். எதிர்ப்பார்புகளை பற்றி மாணவர்கள் கவலைப்படமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம். சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும் என்றார்.

நிகழ்ச்சிக்காக சுமார் 30 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 20 லட்சம் கேள்விகள் பெறப்பட்டுள்ளன. தேர்வு மன அழுத்தம், கல்வி, தொழில் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிறார்.


Next Story