கால்நடை தீவன ஊழல் வழக்கு:லாலு பிரசாத்தின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. மனுசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


கால்நடை தீவன ஊழல் வழக்கு:லாலு பிரசாத்தின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. மனுசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x

வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது.

புதுடெல்லி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதில் சில வழக்குகளில் அவர் தண்டனையும் பெற்று உள்ளார்.இதில் டோரண்டா கருவூல வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது. ஆனால் இந்த வழக்கின் மேல்முறையீட்டில் லாலுவுக்கு ராஞ்சி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். அதாவது இந்த வழக்கில் லாலுவுக்கு வழங்கப்பட்டு உள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை வருகிற 25-ந்தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டு உள்ளது.


Next Story