பஞ்சாப் கோர்ட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: 5 பேர் கைது


பஞ்சாப் கோர்ட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: 5 பேர் கைது
x

பஞ்சாப் கோர்ட்டில் கடந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் கோர்ட்டில் வெடிகுண்டை வைத்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் ககந்தீப் சிங் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், லூதியானா கோர்ட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் ஐ.ஜி. நேற்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர் 18 வயது நிரம்பாத சிறுவன் என போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

கோர்ட்டில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஐஇடி ரகத்தை சேர்ந்தது எனவும், அந்த வெடிகுண்டு பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக ஆளில்லா விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story