டெல்லி மெட்ரோ ரெயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட வாலிபர் - போலீசார் வழக்கு பதிவு
சம்பந்தப்பட்ட வாலிபருக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மெட்ரோ ரெயிலில் வாலிபர் ஒருவர் சக பயணிகளுடன் இருக்கையில் அமர்ந்திருந்தார். கையில் செல்போன் வைத்திருந்த அவர், திடீரென ஆபாச செய்கையில் ஈடுபட்டார். இதைப் பார்த்த பக்கத்து இருக்கை பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் இதுகுறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முதல் தகவல் அறிக்கையையும், குற்றத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மே 1-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணையம் கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாலிபருக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story