சிவமொக்கா டவுனில் வீட்டில் திருடிய 2 பேர் கைது
சிவமொக்கா டவுனில் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் துங்கா நகர் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இல்லாத சமயத்தில் மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து அவர் துங்கா நகர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த திருட்டில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தபரக் உல்லா (வயது 20) மற்றும் அண்ணா நகரை சேர்ந்த சையது சுபான் (20) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து 64 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.