ஓய்வுக்குப்பின் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஓய்வுக்குப்பின் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் பலம் 34 ஆகும். இதில் ஆண்டுக்கு சராசரியாக 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.

புதுடெல்லி

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் பலம் 34 ஆகும். இதில் ஆண்டுக்கு சராசரியாக 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். இவ்வாறு ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு புதிய வசதிகளை மத்திய அரசு வழங்குகிறது.

அதன்படி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இவர்கள் டிரைவர் மற்றும் உதவியாளர் வைத்துக்கொள்ளவும் ஓராண்டுக்கு உரிமை உண்டு. அவர்களுக்கான ஊதியம் அரசு வழங்கும். ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்கு டெல்லியில் வாடகை இல்லாத தங்குமிடம் பெற முடியும்.

இதுதொடர்பாக சட்ட விதிகளை திருத்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது. சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நீதித்துறை இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தற்போதைய தலைமை நீதிபதி வருகிற 26-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதன் மூலம் அரசின் இந்த புதிய வசதிகளை பெறும் முதல் நீதிபதி என்ற பெருமையை பெற உள்ளார்.


Next Story