நண்பனை கத்தியால் குத்திய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
உப்பள்ளி டவுனில் நண்பனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர்கள் சச்சின் மற்றும் ஜான். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவாா்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவர்கள் இருவரும் அந்த பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சச்சின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜானை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த சச்சின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து உபநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜானின் உடலை மீட்டு ஆட்டோ மூலம் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சச்சினை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.