"காலத்திற்கு ஏற்றவாறு காவல்துறை பயிற்சியில் மாற்றம் தேவை" - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா


காலத்திற்கு ஏற்றவாறு காவல்துறை பயிற்சியில் மாற்றம் தேவை - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
x

காலத்திற்கு ஏற்றவாறு காவல்துறை பயிற்சியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

புதுடெல்லி,

மத்திய காவல்துறை பயிற்சி மையங்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காலத்திற்கு ஏற்றவாறு காவல்துறை பயிற்சியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

காவல்துறை பயிற்சியில் தேசப்பற்று, ஒழுக்கம், அறிவுக்கூர்மை மற்றும் நவீன உத்திகளை உள்ளடக்கி பயிற்சி அளிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார். அதே நேரம் ஆன்லைன் பயிற்சிகள் மூலம் காவல்துறையின் திறனை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தொடக்கி வைத்த 'மிஷன் கர்மயோகி' திட்டத்தின் கீழ் காவல்துறையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி. ஆகிய நிலைகளில் உள்ளவர்களுக்கான பயிற்சி முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Next Story