பேஸ்புக் மூலம் பழக்கம்: நேரில் வந்த இளம்பெண்; லாட்ஜ்க்கு அழைத்து சென்று உல்லாசம் - போலீஸ்காரர் அதிரடி கைது
பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய 32 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்கார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சூர்,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீராஜ் (36), போலீஸ்காரர். இவர் திருச்சூர் அருகே ராமவர்மபுரம் போலீஸ் முகாமில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் காசர்கோட்டை சேர்ந்து 32 வயதுடைய ஒரு இளம்பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீராஜ், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அத்துடன் இளம்பெண்ணிடம் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண் ஸ்ரீராஜை நேரில் பார்க்க வந்தார். அப்போது, அவரை ஸ்ரீராஜ் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒட்டலில் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த இளம் பெண்ணை ஸ்ரீராஜ் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து அந்த இளம்பெண் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராஜை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் மூலம் நட்பாக பழகிய 32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.