பாலிதீன் பைகள் பயன்படுத்திய கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு அபராதம்


பாலிதீன் பைகள் பயன்படுத்திய கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:30 AM IST (Updated: 13 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு நகரசபை தலைவர் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் எம்.ஜி.ரோட்டில் 10-க்கும் ேமற்பட்ட மளிகை கடை மற்றும் ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்டு உள்ள பாலிதீன் பைகள் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நகரசபை தலைவர் வேணுகோபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் நகரசபை தலைவர் வேணுகோபால் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த கடைகள் மற்றும் ஓட்டல்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் உபயோகித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து பாலதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று பாலிதீன் பைகள் பயன்படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்து விடுவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். அந்த அதிரடிசோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story