பெஸ்காம் சார்பில் மின் குறைதீர் முகாம் 700 புகார்கள் வழங்கிய மின்நுகர்வோர்


பெஸ்காம் சார்பில் மின் குறைதீர் முகாம்  700 புகார்கள் வழங்கிய மின்நுகர்வோர்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்காம் சார்பில் மின் குறைதீர் முகாமில் மின்நுகர்வோர் 700 புகார்கள் வழங்கினர்.

பெங்களூரு: பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) கட்டுப்பாட்டில் பெங்களூரு, கோலார், சித்ரதுர்கா, துமகூரு, ராமநகர், மண்டியா உள்பட 8 மாவட்டங்கள் உள்ளன. மின்நுகர்வோாின் குறைகளை தீர்க்கும் நோக்கத்தில் மாதந்தோறும் 3-வது சனிக்கிழமை நாட்களில் மின் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெஸ்காமின் எல்லைக்கு உட்பட்ட 86 கிராமங்களில் 4-வது மின் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு சுமார் 700 புகார்களை கூறினர்.

மின் துண்டிப்பு, மின் கம்பம், மின் கட்டணம், ஆதிதிராவிட-பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் 75 யூனிட் வரையில் வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்டவை குறித்து புகார் அளித்தனர். இவற்றில் பெரும்பாலான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. சில புகார்கள் உயர் அதிகாரிளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பெஸ்காம் அதிகாரிகள் கூறினர்.


Next Story